'யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும்” என்னும் தொனிப்பொருளில் சி.ஆர்.சி. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட கண்காட்சி நேற்று(11) வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ. சந்திரசிறியினால் அரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
வடபகுதியில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வெடிப்பு சம்பவங்கள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், மக்களின் அவலநிலை தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் யுத்தத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பும் இக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சியை வவுனியா மாவட்டத்தின் தமிழ், சிங்கள் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பார்வையிட்டுவருகின்றனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment