Saturday, March 22, 2014

சிறைக்கைதிகளுக்கான முதலாவது பாடசாலையை ஜனாதிபதி திறந்துவைத்தார்!

சிறைக்கைதிகளுக்கான முதலாவது பாடசாலையை ஜனாதிபதி  திறந்துவைத்தார்!






இலங்கையில் சிறைக்கைதிகளுக்கான  தனியான முதலாவது பாடசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலையின் வகுப்பறைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

8ஆம் தரத்திலிருந்து கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் இந்த பாடசாலையில், ஜி. சி. ஈ சாதாரணம் மற்றும் உயர்தரம் வரை பாடம் நடத்தப்படுவதற்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா வைபவத்தில்  புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் உட்பட முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment