Wednesday, March 12, 2014

இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று  இலங்கை வருகை!



இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக  இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று  இலங்கை வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாம் கட்ட பேச்சுவார்தை நாளை  வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கையில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள  177 தமிழக மீனவர்களையும், அவர்களின் 44 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தார்.

ஆனால் இதுவரை தமிழக மீனவர்கள் யாருமே இலங்கையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. எனவே நாளை பேச்சு வார்த்தை நடக்குமா? அல்லது, மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

-எம். ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment