Tuesday, March 18, 2014

மாத்தறை தேசிய சேமிப்பு வங்கிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மாத்தறை தேசிய சேமிப்பு வங்கிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!





மாத்தறை நகரின் மத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கிக்கான மூன்று மாடிக் கட்டடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் திறந்துவைத்தார்.

தேசிய சேமிப்பு வங்கியினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடும் நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

கலைஞர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் வழங்கும் திட்டத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேரத்தன, டளஸ் அழகப்பெரும, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மற்றும் பிரதியமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment