Wednesday, March 12, 2014

போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு!

போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு!






கிண்ணியா தி/வான்-எல புஹாரி மகாவித்தியாலயத்துக்கு  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றையும், பாடசாலைக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக ஐம்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலையினையும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டி
பாடசாலை அதிபர் ஏ.எம்.முளவ்பர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே,  பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இந்த அன்பளிப்பை வழங்கினார். விஷேட அதிதியாக கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேஹு அலி  கலந்து கொண்டார்.

அல்-இல்மா, அந்-நூகா, அல்-ஹிக்மா ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில்  அந்-நுஹா இல்லம் சம்பியனாகியது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


No comments:

Post a Comment