Monday, March 10, 2014

ஐ.ம.சு.முன்னணியின் முதலாவது பிரசார கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!

ஐ.ம.சு.முன்னணியின் முதலாவது பிரசார கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!




​மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கம்பஹ நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டதில் ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பீலிக்ஸ் பெரேரா, மேர்வின் சில்வா, பண்டு பண்டாரநாயக்க மற்றும் லசன்த அழகியவன்ன ஆகியோர் உட்பட கம்பஹ மாவட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment