Saturday, March 22, 2014

நாடெங்கும் பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு!

நாடெங்கும் பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு!




கடமையில் இருக்கும் போது அகாலமரணமடைந்த பொலிஸ் வீரர்களை நினைவு கூரும் 150 ஆவது பொலிஸ் வீரர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டடுகின்றது.

யாழ். மாவட்ட நிகழ்வுகள்  யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் இடம்பெற்றன.

1864 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி கேகாலை பிரதேசத்தில் உதுமன் மலை அடிவாரத்தில் சரதியல் என்னும் குற்றவாளியை கைது செய்ய சென்ற போது அவருடைய நண்பரால் முஸ்லிம் பொலிஸ் கான்ஸ்டபள் சபான் சுடப்பட்டு இறந்தார்.

அன்றைய தினத்தை நினைவு கூரும் முகமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment