வேலையற்ற பட்டதாரிகள் அரச நிமனம் கோரி ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தங்களை அரச நியமனங்களில் உள்வாங்குமாறு கோரி இன்று பகல் மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நகரின் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் இந்த பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் இவர்கள் மாவட்ட செயலகத்துக்கு வந்து அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர். தமக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டால் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்றத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment