Monday, March 3, 2014

புனரமைக்கப்பட்ட கணித பிரிவு கட்டடம் திறந்துவைப்பு!

புனரமைக்கப்பட்ட கணித பிரிவு கட்டடம் திறந்துவைப்பு!




179 வருடங்கள் பழைமை வாய்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணித பிரிவுக்கான கட்டடம் பாதுகாப்பு அமைச்சினால் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க. கொழும்பு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.கே. ஹிரிம்புரேகம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment