Monday, March 3, 2014

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு 06 கோடி ரூபா செலவில் புதிய மாணவர் விடுதி!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு 06 கோடி ரூபா செலவில் புதிய மாணவர் விடுதி!





பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 06 கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர் விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரியில் முன்னர் இருந்து வந்த மாணவர் விடுதி நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்ததன் பின்னர், பழைய மாணவரான இயன் கரன், புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வரும் நிலையில், 06 கோடி ரூபா செலவில் மாணவர் விடுதிக்கென இரண்டு கட்டிடத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

அவரும் அவரது பாரியாரும் புதிய மாணவர் விடுதியைத் திறந்துவைத்தனர்.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் யோகேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் , ஜேர்மன் நாட்டின் தூதுவர் டொக்டர் ஜோகன் மோர்ஹார்ட், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment