Sunday, March 9, 2014

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "லிய இசுர" கடன் திட்டம் ஜனாதிபதியினால் அறிமுகம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "லிய இசுர" கடன் திட்டம் ஜனாதிபதியினால் அறிமுகம்!







சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொருளாதார ரீதியில் பெண்களை வலுவூட்டும் "லிய இசுர" கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்துவைத்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இக்கடன் திட்டத்தை ஜனாதிபதி அங்குரார்பப்ணம் செய்துவைத்தார்.

இலங்கையின் சகல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 பெண்களுக்கு நேற்று இக்கடன் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ. திஸ்ஸகரலியத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment