Friday, December 20, 2013

தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழையுங்கள்!

தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழையுங்கள்!

-கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் வடமாகாண சபைக்கும் ஜனாதிபதி அழைப்பு-

Displaying HE-in-parliament-2.jpg

Displaying HE-in-parliament-1.jpg

Displaying HE-in-parliament-3.jpg




நாட்டின் தேசிய நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை நிலை நாட்டும் வகையில் எமது நாட்டுக்கே உரிய தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று (20) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி  தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் தீர்வு காண்பதை விடுத்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

இதற்ககு சம்பந்தன் எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற குழுவும், சீ. விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை உறுப்பினர்களும் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அத்தோடு 30 வருடம் நாட்டை சீரழித்த யுத்தம் மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்பதில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்கு அமைதி சுபீட்சமுமான நாடொன்றை பெற்றுக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

இது எமது நாடு. நாம் அனைவரும் எமது மக்களுக்காகவே செயற்பட வேண்டும். அதுவே எமது பொறுப்பும் கடமையுமாகும். என்றும் ஜனாதிபதி கூறினார்.


-எம்.ஜே.எம். தாஜுதீன்

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது!


பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது!

-பிரதமர் உத்தரவு-
Displaying prime-minister.jpeg


பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது. புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம். ஆனால் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளிலும் பொலிஸார் தலையிடக்கூடாது என்று பிரதமரும் பௌத்தசாசன மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரத்தின உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதே இந்த உத்தரவினை அவர் விடுத்திருக்கின்றார்.

கொழும்பு தெகிவளைப் பிரதேசத்திலுள்ள 3 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்திருந்தனர். அத்துடன் கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் சாபி பள்ளிவாசல்மீது இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எம்.பி.க்கள் நேற்று (20) பிற்பகல் பிரதமர் டிஎம். ஜயரத்தினவைச் சந்தித்து தமது விசனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போதே பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது என்ற உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பி.எச்.எம். பௌசி தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம். ஏ.எல்.எம். அதாவுல்லா, ரிஷாத் பதியுதீன், பஷீர் சேகுதாவூத் ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தெகிவளை பகுதியில் அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெகிவளை தாருல் அர்கம் ஆகிய 3 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

அத்துடன் கொகுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் சாபி பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இவ்வாறு பள்ளிவாசல்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயத்தில் மதவிவகார அமைச்சரான நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அமைச்சர்களும் எம்.பிக்களும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் தெகிவளை பகுதி பள்ளிவாசல்கள் விவகாரம் குறித்து கேட்டறிந்ததுடன் பள்ளிவாசல் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது.

புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம். பழைமையான பள்ளிவசால்கள் விடயத்தில் பொலிஸார் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் விவகாரம் தொடர்பில் பிரதமர் நேரடியாக கவனம்செலுத்த வேண்டும். அமைச்சின் செயலாளர் இதுதொடர்பில் முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் முஸ்லிம் அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

அத்துடன் பௌத்த சாசன அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தினை இரத்துச்செய்ய வேண்டும் என்றும் பிரதமர் தலைமையிலேயே இத்தகைய கூட்டம் இடம்பெறவேண்டும் எனவும் அமைச்சர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இந்த கூட்டத்தினை இரத்துச்செய்த பிரதமர் பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய முடிவுகள் எடுப்பதானாலும் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்
-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விஜயம்!


ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விஜயம்!
Displaying hendala-1.jpg

Displaying hendala-2.jpg

Displaying hendala-4.jpg

Displaying hendala-5.jpg

Displaying hendala-3.jpg


ஹெந்தலையில் உள்ள தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) விஜயம் செய்து அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயளர்களிடம் சுகம் விசாரித்தார்.

அங்குள்ள சகல வார்டுகளுக்கும் சென்ற ஜனாதிபதி நோயாளர்களுடன் சினேகபூர்வமாக உரையாடியதோடு அவர்களுக்கு நத்தார் பரிசுகளும் வழங்கினார்.

நோயாளர்கள் நத்தார் கீதங்கள் இசைத்து ஜனாதிபதியை மகிழ்வித்தனர். அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா உட்பட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பாகிஸ்தான் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு விஜயம்!


பாகிஸ்தான் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு விஜயம்!

Displaying chamaml-3.jpg




இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் இன்று (20) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்றத்தில்  சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியதுடன்  பாராளுமன்ற அமர்வினையும் சர்தார் அயாஸ் சாதிக் பார்வையிட்டார். பிரமுகர்கள் பதிவேட்டிலும் கைச்சாத்திட்டார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள அவர்
இலங்கை - பாகிஸ்தான் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் விருந்துபசாரத்திலும்  கலந்துகொள்வார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Thursday, December 19, 2013

அலரி மாளிகையில் அரச நத்தார் உற்சவம்!

அலரி மாளிகையில் அரச நத்தார் உற்சவம்!

Displaying Xmas-1.jpg

Displaying xmas-2.jpg

Displaying xmas-3.jpg

Displaying xmas-4.jpg

வருடாந்தம் நடாத்தப்படும் அரச நத்தார் உற்சவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின் பங்களிப்புடன் நேற்று (19) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிதா பெனடிக் ஜோஸப் நத்தார் ஆராதனைகளை நடத்தினார். தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நத்தார் பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரத்ன ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

குழந்தைகள் மீது நேசம் காட்டும் தெற்காசிய நாடுகள் மத்தியில் இலங்கைக்கு அதிக மதிப்பெண்!




குழந்தைகள் மீது நேசம் காட்டும் தெற்காசிய நாடுகள் மத்தியில் இலங்கைக்கு அதிக மதிப்பெண்!
Displaying he-report03.jpg

Displaying he-report01.jpg


குழந்தைகள் மீது நேசம் காட்டும் தெற்காசிய அரசாங்கங்கள் தெடர்பான ஆய்வில் இலங்கைக்கு மிக உயர்ந்த குறியீட்டு மதிப்பெண் பெற்றுள்ளது.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் மையம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையை  சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (17) கையளித்தார்.

இது தொடர்பில் பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஜயசேன, பிரதி அமைச்சர்கள் பண்டு பண்டாரநாயக்க, ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, சுதர்ஷின் பெர்னாண்டோபுள்ளே மற்றும்  சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


எம்.ஜே.எம். தாஜுதீன்


சூழல் அழகுபடுத்தும் பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!


சூழல் அழகுபடுத்தும் பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!



கிழக்கு மாகாணத்தில் தேசிய வைபவங்களை நடத்துவதற்காக  மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றுவரும் அழகுபடுத்தும் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
Displaying hisbullah-1.JPG

Displaying hisbullah-2.JPG

சர்வதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை ஒத்தகோணத்திலும் அதையும் விட அழகில்  பிரமிக்க வைக்கும் வகையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளை தமது நிதியொதுக்கீட்டில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பிரதியமைச்சர்  தலைமையில் கிழக்க மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இப்பகுதியை பார்வையிட்டனர்

-எம்.ஜே.எம். தாஜுதீன்

அமைச்சர் ரிசாதுக்கு தேரர் விஜித வல்பொல பட்டம் வழங்கி கௌரவம்!


அமைச்சர் ரிசாதுக்கு தேரர் விஜித வல்பொல பட்டம் வழங்கி கௌரவம்!
Displaying Rishad -7.jpg


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இலங்கை கவி சங்கம்,மற்றும் அஸ்கிரி மஹாநாயக்கவின் பதிவாளரும், இச்சங்கத்தின் அதி நிக்காயக்க தேரர் விஜித வல்பொலவினால் தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டடார்.
இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலத்தில் பௌத்த மதகுரு ஒருவரினால் ஒரு முஸ்லிம் அமைச்சர் தமது சமூக அரசியல்,இன உறவு,புரிந்துணர்வு,சேவை மனப்பான்மை என்பவைகள் தொடர்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

ஜோர்தனை தலைமையகமாக கொண்ட ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட உலகில் 1.7 பில்லியன் முஸ்லிம்களுக்குள் அதி சிறந்த ஆளுமை,செல்வாக்கு செலுத்தும்  2013 2014 ஆம் ஆண்டுக்கான அரசியல் தலைவர்கள் வரிசையில் இலங்கையிலிருந்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்


தாக்கப்பட்ட பள்ளிவாசலை அமைச்சர் ரிசாத் பார்வையிட்டார்!


தாக்கப்பட்ட பள்ளிவாசலை அமைச்சர் ரிசாத்  பார்வையிட்டார்!
தெஹிவளையில் ​நேற்று (18) தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி பள்ளிவாசலுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடனடியாக விஜயம் செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
Displaying Risad-mosque-1.jpg

Displaying risad-mosque-2.jpg

இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

இத்தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடி கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விஷேட கவனத்திற்கும் கொண்டுவந்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் மாப்பண்டங்களுக்குத் தடை!

பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் மாப்பண்டங்களுக்குத் தடை!

Displaying dinesh-gunawardane.jpg



பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் மாவினால் செய்த பண்டங்கள் மற்றும் இனிப்பு குளிர்பானங்கள் விற்பனை செய்வது அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான  தினேஷ் குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் 2011 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.தே.க.  பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வாய்மூல பதிலுக்காக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்