Monday, March 3, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஏப்ரலில் கணக்கெடுப்பு!

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஏப்ரலில் கணக்கெடுப்பு!



இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் நாடாளவிய ரீதியிலான கணக்கொடுப்புகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இச்சங்கத்திற்கு 1990 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு காரியாலயத்திற்கு கிடைத்த  16 ஆயிரம் முறைப்பாடுகளில்  4 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ள  இராணுவ மற்றும் காவல்துறையினர் தொடர்பானது என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு காரியாலய பேச்சாளர் சரசி விஜேரத்ண குறிப்பிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு  தொடர்பான அறிக்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment