Tuesday, November 26, 2013

கடுவல நவீன பஸ் நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

கடுவல நவீன பஸ் நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Displaying kaduwela-2.jpg

120 மில்லியன் ரூபா செலவில் கடுவல நகரில் மூன்று மாடிகளைக் கொண்டதாக புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) திறந்துவைத்தார்.
Displaying kaduwela-4.jpg

Displaying kaduwela-1.jpg


இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில்  அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, கடுவல நகர முதல்வர் ஜீ.எச். புத்ததாச ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொணடனர். 

Displaying kaduwela-3.jpg


-எம்.ஜே.எம். தாஜுதீன்

Monday, November 25, 2013

ஹோ சி மிங்கின் உருவச் சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

ஹோ சி மிங்கின் உருவச் சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு! 


Displaying ho-chi-min-1.jpg



கொழும்பு பொது நூலக வளவில் அமைக்கப்பட்ட வியட்னாமின் தேசியத் தலைவர் ஹோ சி மிங்கின் உருவச் சிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) திறந்துவைத்தார்.

Displaying ho-chi-min-1.jpg-2.jpg

இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையிலான் நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுருந்த ஹோ சி மிங்கின் புகைப்படக் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

Displaying ho-chi-min-1.jpg-3.jpg

வியட்னாம் உதவிப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.


-எம்.ஜே.எம். தாஜுதீன்

Thursday, November 21, 2013

2014 நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரை!

2014 நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரை!



2014 நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட பிரேரணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பிற்பகல் பாராளுமன்றில் சமர்பித்தார். 











-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, November 17, 2013

இலங்கை மக்களை பிளவுபடுத்தாதீர்!

இலங்கை மக்களை பிளவுபடுத்தாதீர்!

-சர்வதேச ஊடகங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை-



இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பவதற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்பத்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்தார். 

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று (17) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிதி ​தொடர்ந்தும் உரையாற்றுகையில்-


இலங்கையில் உள்ள சகல இன மக்களும் எனது நாட்டின் பிரஜைகளே. அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எனக்குரியது. அதனை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அகியவற்றுக்கு பொதுநலவாயம் மிகவும் மதிப்பளிக்கின்றனது. அதேபோன்று எமது நாட்டின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் நாம் மதிக்கிறோம்.

எமது நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் நீடித்த பாரிய பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வை எதிர்பாரக்க முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

ஒரு சிலரையல்ல - அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வையே நான் விரும்புகிறேன். இதற்காக தென் ஆபிரிக்காவின் அனுபவங்களை கவனத்தில் கொண்டுள்ளோம்.

ஜனநாயத்தை மதிக்கும் நாம் நாடு முழுவதிலும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்திவருகிறோம். வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி வெற்றிபெற்றுள்ளது.


வட மாகாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறுனார்.

இந்த ஊடகவியலளார் சந்திப்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, கயானா ஜனதிபதி டொனால்ட் ரவீந்திரநாத் ரமோட்டார், மலேசியப் பிரதமர் டத்தோ முகம்மது நஜீப் அப்துல் ரஸாக், தென்னாபிரிக்க ஜனாதிபதி கெனப் சுமா ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Saturday, November 16, 2013

இது ஜனநாயக நாடு- டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து!

 இது ஜனநாயக நாடு- டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து!


 -ஜனாதிபதி விளக்கம்-



எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் சர்வததேச விசாணைக்கு ஆமுகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து. இது ஜனநாயக நாடு என்பதால்  எவருக்கும் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்-

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. விசாரணைகள் மேற்கொள்ள திறமை மிக்க பக்க சார்பற்ற அதிகாரிகள் எமது நாட்டில் உள்ளனர். இந்த ஆணைக்குழுவுக்கு எவரும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் 


ஆனால் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பவர்களில் சிலர் இந்த நாட்டில் இல்லை. இன்னும் சிலருக்கு இலங்கையில் பிரஜா உரிமைகூட 
இல்லை.

ஒரு பக்க நியாயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள். மறுபக்க நியாயத்தையும் எமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களை எமது படையினர் மீட்டனர். அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கிப் பாதுகாத்ததோம். இன்று அவர்களை அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்துள்ளோம்.

வடக்கின் அபிவிருத்தி வேகம் 22 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு அபிவிருத்திக்காக செலவிடப்படுகின்றது.

30 வருட கால பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் துடைத்தெறிந்தோம். இது ஒரு குற்றச் செயலா? நாட்டில் புலிகள் அராஜகம் புரிந்த காலத்தில் எந்த ஊடகமும் தமிழ் மக்களின் நலன்க​ளைப் பற்றி வாய்திறக்காதிருந்ததேன்​?

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனுடன் நான் சினேகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் வடபகுதிக்குச் சென்றதை பெரிதும் வரவேற்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

-எம்.ஜே,எம். தாஜுதீன்

Friday, November 15, 2013

எவருடனும் பேசத் தயார்- ஆனால் நாட்டைப் பிரிக்க இடமளியேன்!

எவருடனும் பேசத் தயார்- ஆனால் நாட்டைப் பிரிக்க இடமளியேன்!

-ஊடக கலந்துரையாடலில் ஜனாதிபதி-


நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் எங்களுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எவருடனும் நாம் பேசத் தயார். ஆனால் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளியேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். 


நாளை (15) பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்- 


பல நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள உண்மை நிலையை அறிய விருப்பம் கொண்டவர்களாக இருப்பின்  தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறிய அவர் அவர்கள் எல்ரீரீஈ ஆதரவாளர்களுடனோ அல்லது அவர்கள் சார்பாக வருகை தந்துள்ளவர்களுடனோ மாத்திரம் பேச்சுவார்த்தை நடாத்தாமல் எங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். தனது கொள்கை சகலரது மனங்களையும்
வெற்றிகொள்வதேயாகும் எனவும் கூறினார். 


சரணடைந்த 14000 எல்ரீரீஈ உறுப்பினர்களை குறுகிய காலத்துக்குள் புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்துக்கொண்டதுடன் யுத்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களை குறுகிய காலத்துள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம்
எனவும் அவர் சுட்டிக் காட்டினார்;. 
30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் நாம் பாதிப்புற்றுள்ளோம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை படுகொலை செய்யப்பட்ட பெண்கள், கர்ப்பிணி பெண்கள் பிள்ளைகள்  மழலைகள் பற்றி பேசாமல் 2009 ம் ஆண்டைப்பற்றி மாத்திரம் பேசுவதேன்? 

2009 க்கு முன்பு தினமும் மக்கள் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன. தற்போது அவை யாவும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துமீறல்கள் சம்பந்தமாக எவரும் முறைப்பாடு செய்யவிரும்பினால் அதற்கான நீதித்துறை வசதிகள் 
நம் நாட்டில் உள்ளனவெனவும் ஜனாதிபதி  கூறினார். ஏதாவது முறைகேடான வகையில் நடந்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயாராகவுள்ளோம் 

தான் எவரையும் சந்திக்கவோ பேச்சுவார்த்தை நடாத்தவோ தயாராக உள்ளதாக ஜனாதிபதி கூறினார். நாட்டை பிரிப்பதற்கு மாத்திரம் இடமளிக்க போவதில்லையென கூறிய ஜனாதிபதி யுத்தத்தின் பின்பு மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர் எனவும் கூறினார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி  பிரித்தானிய பிரதம மந்திரி டேவிற் கமரூனை சந்திப்பதற்கு  சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். 

இந்திய பிரதமர் மகாநாட்டுக்கு சமூகமளக்காதது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு- இந்தியாவின் பங்கேற்பை தான் முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் 2011 பேர்த்தில் நடைபெற்ற மகாநாட்டிலும் பங்கேற்கவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

-பொது நலவாய உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை-


மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் கோலாகமாக ஆரம்பமாகியது. இம்மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.


தாமரைத்தடாகம் கலை அரங்கிற்கு வருகைத்தந்த வெளிநாட்டு த்தலைவர்களையும் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ , ஜனாதிபதியின் பாரியாரான  ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அன்னாரின பாரியார் ஆகியோர் வரவேற்றனர்.



பாடசாலை மாணவ மாணவிகளினால் தேசிய கீதமும் வரவேற்பு கீதமும் இசைக்கப்பட்டதையடுத்து   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில்  உரை நிகழ்த்தினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

பொது மக்கள் தான் எமது நாட்டின் பெறுமதிமிக்க சொத்து என்பதை மறந்து விட முடியாது. பொதுவான வறுமை பிரச்சினை குறித்து பொதுநலவாய அமைப்பு கவனம் செலுத்த வேண்டும். 

உணவு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை குறைத்து மதித்து அரசியல் பிரச்சினைகளை பற்றி கவனம் செலுத்த முடியுமா? 

2007ஆம் ஆண்டு 15.2 வீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை  யுத்தம் முடிந்துள்ள நிலையில் இன்று 6.5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் இடைக்கால இலக்கை கடந்து இலங்கை பயணித்துக் கொண்டிருக்கின்றது.

யுத்தத்தின் பின்னர் நிலையான நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை நோக்கிச் நேர்மையான அணுகுமுறையில் நாடு சென்று கொண்டிருக்கின்றது.

நாட்டில் அனைத்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. 


பொதுநலவாய மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்தாது மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்,பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

இம்மாநாட்டில் 53 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

எம்.ஜே.எம். தாஜுதீன்

Wednesday, November 13, 2013

அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை பயணம்!

அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை பயணம்!



கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவபய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அரச தலைவர்கள் நாளை அம்பாந்தோட்டை மற்றும் மரிஜ்ஜவிலவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

கொழும்பில் இருந்து விசேட ஹெலிகொப்டர்கள் மூலம் அம்பாந்தோட்டை செல்லும் இவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு நகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டையில்  இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ள வர்த்தக பிரமுகர்களின் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்வர்.

அதனைத் தொடர்ந்த மாலை நான்கு மணிக்கு மிரிஜ்ஜவெல தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்யும் தலைவர்கள் அங்கு மரம் நடுகை நிகழ்வில் கலந்துகொள்வர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர்!

இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர்!

-அமைச்சர் பசில் கருத்து



தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தேசமாகவும் வாழ்கின்றனர் என பொருளாதார அபிவருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் விசேட ஊடக மத்திய நிலையத்துக்கு நேற்று 13) வருகை தந்த அமைச்சர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். 

அமைச்சர் தொடர்ந்தும் ருத்து தெரிவிக்கையில்-

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பது குறித்து இந்திய மக்கள்தான் கவலைப்பட வேண்டும். இலங்கை மக்களுக்கு அதனால் எவ்வித கவலையுமில்லை. பாதிப்பும் இல்லை.

தமிழ் நாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். உண்ண உணவின்றி மக்கள் வாடுகின்றனர். இவற்றை மறைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கையில் மூக்கை நுழைக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார். 


-எம்.ஜே.எம். தாஜுதீன்

Tuesday, November 12, 2013

மாநாட்டுக்கு முன்னோடியான மூன்று பேரவைகளும் பெரும் வெற்றி!

மாநாட்டுக்கு முன்னோடியான மூன்று பேரவைகளும் பெரும் வெற்றி!

-பேராசிரியர் பீரிஸ் பெருமிதம்-




பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வர்த்தக,இளைஞர் மற்றும் மக்கள் பேரவை ஆகிய மூன்று நிகழ்வுகளும் பெரும் வெற்றியளித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொது நலவாய மாநாட்டை முன்னுட்டு நேற்று (12) பிற்பகல் பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப விசேட ஊடக நிலையத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுயதாவது-

பொதுநலவாய நாடுகளின் வர்த்தகப் பேரவை வரலாற்றில் இலங்கை பெரும் சாதனை படைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் எண்ணிக்கையில் அங்கத்துவ நாடுகள் இப்பேர​வையில் கலந்து கொண்டன.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டைப் பகிஷ்கரித்துவிடார் என்ற குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை. இதனை சிலர் தவறாக புரிந்துள்ளனர்.
இந்த மாநாட்டில் தன்னால் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது என்றே அவர் அறிவித்துள்ளார் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில்- இலங்கையில் மனித உரிமைகளை பலப்படுததுவது தொடர்பில் பொதுநலவாயம் அதிக அக்கரை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மொரீசியஸ் வௌிவிவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அர்வின் பூலல், பாபிடோஸ் வௌிவிவகார அமைச்சர் மெக்ஸின் மெக்லின் பொது நலவாயத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உக்கு ஆகியோர் கலந்துகொண்டனர்.



Monday, November 11, 2013

மத்திய வங்கி நூதனசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மத்திய வங்கி நூதனசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!



கொழும்பில்   புதிதாக அமைக்கப்பட்ட மத்திய வங்கி நூதனசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று (11) திறந்துவைத்தார்.


கொழும்பு சத்தாம் வீதியில் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த சென்ட்ரல் பொயின்ட் கட்டடம் புனரமைக்கப்பட்டு அதில் மத்திய வங்கியின் நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டடம் புலிகளின் தாக்குதலினால் மிகவும் மோசமான முறையில் சிதைவடைந்திருந்தது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி ​செயலாளரின் பணிப்பின் பேரில் இக்கட்டடம் புனரமைக்கப்பட்டது.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள் இந்த வைபவத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 


-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, November 10, 2013

காலியில் பொது நலவாய மக்கள் மன்றம்!

காலியில்  பொது நலவாய மக்கள் மன்றம்!







நேற்று மாலை காலியில் நடைபெற்ற பொது நலவாய மக்கள் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.


அமைச்சர்களும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.



மாநாட்டை முன்னிட்டு காலி- ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந் தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண் டிருந்தன.  விசேட போக் குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.




கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக நேற்று (10)அம்பாந்தோட்டையிலும் ஹிக்கடுவையிலும் இரண்டு மாநாடுகள் நடைபெற்றன.

-எம்.ஜே.எம். தாஜுதீன்