Monday, March 3, 2014

பாதுகாப்புச் செயலாளர் இந்தியா செல்கிறார்!

பாதுகாப்புச் செயலாளர் இந்தியா செல்கிறார்!



பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்  செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு  இந்த வாரம் இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, ஆகிய நாடுகள் வருடாந்தம் நடத்தும் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, அவர் இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களில் அவர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், பாதுகாப்புச் செயலாளரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளமை முக்கியமானதாகும்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment