ஓய்வுபெறும் தினத்திலேயே ஓய்வூதியம்!
ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும் தினத்திலேயே ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ,பி. ஜயசுந்தர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-
ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் நாடு முழுவதிலும் பொய் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றில் எதுவித உண்மையும் இல்லை.
2002 ஆம் ஆண்டின் ஆட்சியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தை இடைநிறுத்தினார்கள். எனினும் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு முதல் நாம் அதனை மீண்டும் அமுல்படுத்தினோம். இதன் காரணமாக இன்று 4 லட்சத்து 50 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
தவிர்க்கமுடியாத காரணங்களினால் கடந்த காலங்களில் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன. அதனை சீர்செய்யும் வகையில் அரசாங்க வங்கிகளுடன் இணைந்து தாமதம் இன்றி ஓய்வூதியம் வழங்கும் புதிய நடைமுறையை நாம் விரைவில் அமுல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment