அதிவேகப்பாதைகள் பற்றிய சிறப்பு மலர் ஜனாதிபதிக்கு கையளிப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பாதைகளின் வரலாறு'என்ற சிறப்பு மலர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
தெற்கு அதிவேகப்பாதை கடந்த சனியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவரீதியாக திறந்து லைக்கப்பட்டது. இது தொடர்பாக மாத்தறை, கொடகமை நில்வலா நுழைவாயிலில் நடைபெற்ற வைபவத்தின் போதே, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவினால் ஜனாதிபதியிடம் இந்த சிறப்பு மலர் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் திரைப்படப்பிரிவினால் தயாரிக்கப்பட்ட அதிவேகப்பாதை பற்றிய விவரணப்பட இறுவெட்டு ஒன்றும் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் பலாபலன்கள் மக்களை சென்றடையும் வேளைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இத்தகைய இறுவெட்டுக்கள் மற்றும் சிறப்பு மலர்கள் ; வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment