Tuesday, March 18, 2014

கச்சதீவு திருவிழாவில் 5000 யாத்திரிகர்கள்!

கச்சதீவு திருவிழாவில் 5000 யாத்திரிகர்கள்!



வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இம்முறை திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 5000 க்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்துகொண்டிருந்ததாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியை இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அருட்தந்தைகள் கூட்டாக ஒப்புக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த 3128 யாத்திரிகர்கள் 95 விசைப்படுகளிலும் இலங்கையைச் சேர்ந்த 2151 பக்தர்கள் 89 படகுகளிலும் கச்சத்தீவை சென்றடைந்திருந்தனர்.

வழமைபோன்று இம்முறையும் கச்ச தீவில் யாத்திரிகர்களுக்குத் தேவையான மருத்துவ, உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment