Saturday, March 22, 2014

ஹஸன் மாவத்தை தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் பெயர் மாற்றம்!

ஹஸன் மாவத்தை தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் பெயர் மாற்றம்!



மாவனல்லை, பிரதேசத்தில் ஹஸன் மாவத்தை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அனாகரிக தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் பொதுபல சேனா அமைப்பு இன்று மாலை மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை மாவனல்லை நகரில் பௌத்த தீவிர அமைப்பான பொதுபல சேனாவின் கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, இன்றைய கூட்டத்தை மாவனல்லை பொது மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்தாலும் நேற்று திடிரென மாவனல்லை நகர மத்தியில் நடாத்துவதென அவ்வமைப்பு மாற்றியுள்ளது.  

இன்று மாவனல்லை நகரமெங்கும் பாதுகாப்பு கடமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முஸ்லிம் சகோதரர்கள் செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறும், புகைபடங்கள் எடுத்தல் மற்றும் வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்குதல் என்பவற்றிலிருந்து தவிர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம் வேண்டிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment