Saturday, March 22, 2014

இனிமேல் வள்ளங்களை ஒப்படைக்க மாட்டோம்!

இனிமேல் வள்ளங்களை ஒப்படைக்க மாட்டோம்!



இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் வள்ளங்கள் இனிமேல் ஒப்படைக்கப்படமாட்டாதென கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

நடக்க விருக்கும் பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் திட்டவட்டமாக வலியுறுத்தப்படும் என்றும்  இது தொடர்பாக இந்திய மத்திய அரசுக்கும் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-



1974 ல் இலங்கை சர்வதேச கடல் எல்லை உடன்படிக்கையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்றொழில் பிரதேசம் என்று கூறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்றனர். இதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.  

25ம் திகதி பேச்சுவார்த்தை நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்கள் அவர்களது வள்ளங்களுடன் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வள்ளங்களுடன் விடுதலை செய்தோம்.

ஆனால் இனிமேலும் அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் வள்ளங்களை ஒப்படைப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். நடக்க விருக்கும் பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்றும்  அமைச்சர் ராஜித சேனாரட்ன  தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment