Thursday, March 27, 2014

கலைஞர் பேர்ட்டி குணதிலக்கவின் கோரிக்கையை நிறைவேற்றினார் ஜனாதிபதி!

கலைஞர் பேர்ட்டி குணதிலக்கவின் கோரிக்கையை நிறைவேற்றினார் ஜனாதிபதி!



பிரபல நகைச்சுவைக் கலைஞர் பேர்ட்டி குணதிலக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்கல்ல கால்டன் இல்லத்தில் சந்தித்து சினேகபூர்வமாக உரையாடினார்.

நோய்வாய்ப்பட்டுள்ள தனக்கு சிகிச்சைக்காக இரு வாரங்களுக்கு ஒரு முறை கொழும்புக்குச் சென்றுவருவதில் பொரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கலைஞர் பேர்ட்டி குணதிலக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி உடனடியாக பொறியியல் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தொடர்புகொண்டு கலைஞர் பேர்ட்டி குணதிலக்கவுக்கு கொழும்பில் வீடு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment