Tuesday, March 18, 2014

வட மாகாண சபையின் 7ஆம் அமர்வு நாளை!

வட மாகாண சபையின் 7ஆம் அமர்வு நாளை!



வட மாகாண சபையின் 7ஆம் அமர்வு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் நாளை நடைபெறுகின்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர்களால்  15 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும், மீனவர்களின் வாழ்வாதர மேம்பாட்டிற்காக நந்திக்கடல் பகுதியை 3 முதல் 4 அடி ஆழமாக்க வேண்டும், போருக்கு முன்னர் இயங்கிய தும்புத் தொழிற்சாலையை மாற்றிடத்தில் அமைக்க மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள்  பிரேரணைகளாக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment