Saturday, August 31, 2013

ஜனாதிபதி - நவநீதம் பிள்ளை சந்திப்பு!



ஜனாதிபதி - நவநீதம் பிள்ளை சந்திப்பு!




இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலhன சந்திப்பும்  பேச்சுவார்த்தையும் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.





அலரி மாளிகையைப் பார்க்க வந்திருந்த பாடசலை மாணவர்களையும் நவநீதம் பிள்ளை சந்தித்து இலங்கையின் சுதந்திரக் கல்வி பற்றி உரையாடினார்.



ஜனாதிபதிக்கும் நவநீதம் பிள்ளைக்கும் இடையில்  நடைபெற்ற சந்திப்பு தொடர்பில்  ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


புனர்வாழ்வு- மீள்நிர்மாணம்- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.


புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும்  காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர் வரவேற்றுள்ளார்.


சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஐக்கிய நாடுகள் சபையை நாட்டுமக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர்.

என்னுடைய அமைச்சரவையில் பல்வேறு கொள்கைகள்-சிந்தனைகளை கொண்ட குழுவினர் இருக்கின்றனர். எனினும் பொதுகொள்கையின் கீழ் அவர்களை வழிநடத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Friday, August 30, 2013

වල් බිහිවි අති සෝන්ඩස් පාරේ නාණු පද්දතිය

වල් බිහිවි අති සෝන්ඩස් පාරේ නාණු පද්දතිය

ඩෙංගු මර්ධන  වැඩසටහන් කි‍්‍රයාත්මක කරමින්  නිවාස දැඩි සොදිසියට ලක් කරන අතර නිවසියන් දැනුවත් කිරිමද සිදුවෙමින් පවති එහෙත් මිගමුව සෝන්ඩස් පාරේ් නිවසියන් පවසන්නේ සෝන්ඩස් පාරේ දෙපස කාණු සුද්ද කර දෙන ලෙයසි අපවිත‍්‍ර ජලය බැස නොයන වල් බිහිවු මෙම කාණු  දැකිය හැකිය මේ පිළිබදව සොයා බලා  නිසි ප‍්‍රතිකර්ම යෙදිමට බලධාරින්ගේ අවධානය යොමුවිය යුතුවේ






 සටහන සහ ඡුායා  සුජාඉල් මුනිර්            15-08-2013

පියස වැසේ සේවාවන් කෙසේ ?

පියස වැසේ සේවාවන් කෙසේ ?

ඔබේ සේවාවන් අප හට ලැබෙන්නේ කවදාද ? මෙසේ ඇසිය යුත්තෙ මිගමුව ප‍්‍රධාන තැපැල් කාර්යාලයේ පිහිටුවා ඇති වසරකට අදික ආසන්න කාලයක් වසා ඇති සේවා පියස සම්බන්දවයි මෙහි ඇති පරිඝනක යන්ත‍්‍ර ඡුායා පිටපත් යන්ත‍්‍ර පොත් පත් මෙන්ම අනෙකුත් භාන්ඩ  දූවිලි වලින් වැසි ඇති ආකාරයක් දැකිය හැකිවේ  මෙය සකි‍්‍රය කරන්නට වගකිව යුත්තන්ගේ නෙත් යොමුවේවා



ඡුායා සහ සටහන      සුජාඉල් මුනිර්         21-08-2013

பாராளுமன்றில் தொண்டமானின் உருவப்படம்!





பாராளுமன்றில் தொண்டமானின் உருவப்படம்!



இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்ட  சௌமியமூர்த்தி தொண்டமானின் நூறாவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அன்னாரின் உருவப்படம் ஒன்று இன்று  திறந்துவைக்கப்பட்டது.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- பிரதமர் தி.மு. ஜயரத்ன- சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க- மற்றும் ஆளும் கட்சி - எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



-எம்.ஜே.எம். தாஜுதீன்

அஷ்ஷைக் றியாழ் மௌலவி - மீள்பார்வை மீடியா சந்திப்பு

மீள்பார்வை மீடியா அண்மையில் (கடந்த 29.08.2013)  அஷ்ஷைக் றியாழ் மௌலவி அவர்களை அவர்களது வீட்டில்  சுகம் விசாரிக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்




புகைப்படமும் தகவழும்: சுஜாயில் முனீர்

Thursday, August 29, 2013

மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக் கெஹெலிய மறுப்பு!


மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக் கெஹெலிய மறுப்பு!



தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விடயம் சூடுபிடித்தது.

தான் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளரை மணந்து கொள்ள விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம்  சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இக்கருத்து  தெடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்கம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய- இது அவரது தனிப்பட்ட விடயம். அது பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

உங்களது கண்டிப் பிரதேசத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என மற்றும் ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதிலலித்த அமைச்சர் அது பொலிஸ் தினைக்களத்தினால் நடாத்தப்பட் ஒரு நிகழ்வு. இது ஒரு சர்வதேச வேலைத்திட்டமாகும் என்று கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பதிவு செய்யப்படாத இணையத்தளங்களின் தடைக்கு பொறுப்புக்கூறமுடியாது!

பதிவு செய்யப்படாத இணையத்தளங்களின் தடைக்கு பொறுப்புக்கூறமுடியாது!

-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல-

தகவல் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க முடியாதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) தகவல் ஊடகத்துறை அமைசில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலலிளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-

இலங்கையில் இயங்கும் இணையத்தளங்களை எமது அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவை முடிவின்படி நாம் செய்துள்ளோம்.

அதற்கான முந்திய கட்டணங்களும் குறைக்கப்பட்டு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகளை இணையத்தளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அமைச்சில் பதிவு செய்துகொள்ளாத எத்தனையோ இணையத்தளங்கள் இலங்கையில் இயங்குகின்றன. அவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தினால் பொறுப்புக் கூறமுடியாதென்றும் அமைச்சர் கூறினார். (எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம்!



இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம்!


-அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு-


இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கும் அப்பால் எமது அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் விரும்பிய இடமெல்லாம் சென்று வர சகல வசதிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) தகவல் ஊடகத்துறை அமைசில் நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.


யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அது பற்றி அறிந்து செல்லவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளார். அவர் எங்கெங்கு செல்ல வேண்டும் என நாம் வழிநடத்தவில்லை. அவர் விரும்பிய இடங்களுக்குச் செல்ல சர்வதேச இராஜதந்திர வரையறைகளுக்கும் அப்பால் சென்று அனுமதி வழங்கியுள்ளோம்.


ஏனெனில் அவரிடம் மறைப்பதற்கு இலங்கை அரசிடம் எதுவும் இல்லை. அவர் நேற்று முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.


அவர் இப்போது வந்திருப்பதை விட முள்ளிவாய்க்காலில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாக பிடித்துவைத்திருத்தபோது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவர் இலங்கையில் எங்கும் செல்லலாம். எவரையும் சந்திக்கலாம். எந்தக் கருத்தையும் தெரிவிக்கலாம் ஆனால் இலங்கை அரசாங்க நிருவாக செயற்பாடுகளில்- அதாவது யாரை அமைச்சராக்குவது- எவருக்கு எந்தப் பதவி வழங்குவது என்பன குறித்த அதிகாரம் அவருக்கு ஒரு நூல் அளவுகூட இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். (எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதி நேற்று நாடு திரும்பினார்!

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெலாரஸ் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) அதிகாலை நாடு திரும்பினார்.


பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன- மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முக்கியஸ்தர்கள் விமாக நிலையம் சென்று ஜனாதிபதி குழுவினரை வரவேற்றனர்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாகவும் பல துறைகளிலும் இலங்கைக்கு நன்மை பயக்கும் ஏழு உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Tuesday, August 27, 2013

தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையாளராக ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. நியமனம்!

தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையாளராக  ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. நியமனம்!

பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எச்.எம்.அஸ்வர்  தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.



தகவல் ஊடகத்துறை அமைச்சில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லை முன்னிலையில் இவர் இன்று (27) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமது அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரை தமது அமைச்சுக்கு நியமித்தமை குறித்து தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த வைபவத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இலங்கைக்கும் பெலாரஸுக்கும் இடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும்  பெலாரஸுக்கும் இடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!


இலங்கைக்கும் பெலாரஸுக்குமிடையில் நேற்று (26) ஏழு  உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.


மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெலாரஸ் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகன்ஷன்கோ ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.


வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை- இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல்- குற்றவியல் தொடர்பான விடயங்களின்போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம்- சட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை- இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுக்கும் உடன்படிக்கை- சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டன.


-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, August 25, 2013

மின்ஸ்க் தேசிய விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு!






மின்ஸ்க் தேசிய விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு!




ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸிற்கு இன்று (26) சென்றடைந்தார்.



பெலாரஸின்  மின்ஸ்க் தேசிய விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை- அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் வெலாத்மிர் மகாய் வரவேற்றார்.



இந்த விஜயத்தின் போது- பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சான்டர் லுகஷென்கோ மற்றும் பிரதமர் பேராசிரியர் மிஹாயில் மியஸ்னிகோவிச் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவூள்ளனர்.


பெலாரசில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கை வர்த்தக குழுவொன்றும் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதியும்- பெலாரஸ் பிரதமரும் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறை ஒன்றிய மாநாட்டிலும் கலந்துகொள்ளும் ஜனாதிபதி- மின்ஸ்க் நகரிலுள்ள வாகன உற்பத்தி நிலையமொன்றையும் பார்வையிடுவார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

தமிழ் தேசிய கூட்டமைப்பpன் இரு உறுப்பினர்கள் ஆளும் கடசியில் இணைவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பpன் இரு உறுப்பினர்கள்  ஆளும் கடசியில் இணைவு!






தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

வடமாராச்சி தென்மேற்கு பிரதேச சபை உப தலைவரான ஈ. சந்தோஷபுரம் மற்றும் பருத்தித்துறையைச் பிரதேச சபை  உப தலைவர் எம். லோகசிங்கம் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியில் ணைந்துக் கொண்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சிரேஷ்ட அமைச்சர் அதாவு செனவிரத்ன அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ இசுசில் பிரேம ஜயந்த மற்றும் தொழில் சங்கத்தின் ஜனாதியின் இணைப்புச் செயலாளர் சுமித் விஜேசிங்க இஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாகச் செயலாளர் ஏ.ஆரியரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Thursday, August 22, 2013

இன்னும் பத்து வருடத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும்!





இன்னும் பத்து வருடத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும்!

-இந்திய ஊடகவியலாளர் சங்கத்தலைவர் கருத்து-



இன்னும் பத்து வருட காலத்தில் இலங்கை பரிபூரண அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழும் என இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பஸ்கர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏழு நாள் சுற்றுலாவை நிறைவு செய்த இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் (20) கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.


இந்தியாவின் 13 மாநிலங்களில் இருந்து இலங்கை வந்த 32 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கண்டி- காலி- நுவரெலியா- மாத்தளை- திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா மோற்கொண்டு  அப்பிரதேசங்களில் பொதுமக்களைச் சந்தித்து தகவல்கள் அறிந்துகொண்டனர்.

அவர்கள் நாடு திரும்பு முன்னர் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பஸ்கர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:

எந்தவொரு ஆசிய நாட்டிலும் காணமுடியாத துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை இலங்கையில் கண்டோம்.

நகரங்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு அவை தூய்மை மிக்க நகரங்களாக உருவாக்கப்படுகின்றன.

வடக்கில் வாழும் பொது மக்களைச் சந்தித்து அங்குள்ள உண்மையான நிலைவரங்களை அவர்கள் மூலம் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

அன்று வடக்கில் அடிமைகள் போன்று அச்ச உணர்வுடன் வாழ்ந்த மக்கள் இன்று சுத்திரமாகச் செயற்படுகின்றனர். சகல இன மக்களும் அங்கு புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர்.

இலங்கை உள்விவகாரங்களில் இந்திய அதிகாரிகள் தலையிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு நன்மதிப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய  ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர்  போதிய தெளிவில்லாத காரணத்தினாலும் தனிப்பட்ட இலாபங்களுக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள சிலர் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றார்.

தமிழ் நாட்டில் உள்ள 6 கோடி மக்களும் இந்திய சனத்தொகையில் 6 சதவீதத்தினர் மட்டுமே. தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவின் சகல மாநிலங்களும் இலங்கையின் நடைவடிக்கைகள் குறித்து திருப்தியடைந்துள்ளன என்றும் கூறினார்.

யுத்த காலத்தில் நாம் பட்ட துயரங்கள் போதும். இப்போது நாம் நிம்மதியாக உள்ளோம். இப்போது எங்களுக்கு மானியங்கள் தேவையில்லை. தொழில்களே ​வேண்டும். அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக நாம் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுவருகிறோம் என்றும் வடக்கு மக்கள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்தார்.

இந்திய உதவியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்ட அமைப்புப் பணிகளையும் வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளையும் நாம் பார்வையிட்டோம். அவை மிகவும் சிறப்பான முறையில் இயங்கிக்கொண்டிக்கின்றன என்றும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மேஸ்ரஸ்ரலும் தெரிவித்தார். (எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்