Sunday, March 9, 2014

கடல்வழி தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம்!

கடல்வழி தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம்!




இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி பாதுகாப்பின் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.



இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, மாலைத்தீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் முகம்மது நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல் வழிப்பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் 2011 ஆம் ஆண்டு மாலைத்தீவில் இடம் பெற்றதுடன் இரண்டாவது தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு, கூட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்றது.

அடுத்த கட்ட கலந்துரையாடல் மாலைத்தீவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment