Saturday, March 22, 2014

தேசிய எல்லை நிர்ணய ஆலோசனைக் கூட்டம்!

தேசிய எல்லை நிர்ணய ஆலோசனைக் கூட்டம்!



உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இனிவரும் காலங்களில் வட்டார முறையில் நடத்தப்படவுள்ளதால் அது தொடர்பில் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்குமிடையில் அமைச்சில் நடைபெற்றது.  

இதற்காக நாட்டிலுள்ள 367 உள்ளுராட்சி சபைகளினதும் நிலப் பிரதேசங்கள் வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவதற்காக தேசிய மற்றும் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் நிருவப்பபட்டு அவை தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
மாவட்டக் குழு தனது அறிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததை அடுத்து தற்போது வட்டாரங்கள் எல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு அப்பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.


இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் ரவி திசாநாயக்க உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment