2014 ஆம் ஆண்டில் பதுளை மாவட்ட அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2592 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அரசாங்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் விசேட கூட்டம் நேற்று பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி அடிப்படை வசதிகள் அபிவிருத்தி, ஜீவனோபாய நடவடிக்கை, கிராமிய எழுச்சி, கிராமிய வீதி அபிவிருத்தி, நீர்பாசன நடவடிக்கைகள், பாடசாலை சுகாதாரம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்காக செலவிடப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சீ.நந்தா மெதிவ், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா ஆகியோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment