Saturday, March 22, 2014

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முடியாது!

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முடியாது!





ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்தெரிவித்துள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு அளித்தல் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா தனது நட்பு நாடுகளிடம் கோரி வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு ஆஸ்திரேலியா இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment