மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணகள் இன்று சனிக்கிழமை (22) மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இன்றைய அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து 52 முறைப்படுகள் இன்றைய விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இன்றைய விசாரணையில் இரகசியமாக சாட்சியமளிக்க வேண்டும் என ஒரு வயோதிபப் பெண் கேட்டுக் கொண்டார். அதன்பிடி அவரது சாட்சியம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது.
நேற்று கோரளைப்பற்று தெற்கு மற்றும் வடக்கு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கான விசாரணைகளை கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment