Wednesday, October 30, 2013

அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்குபற்றவில்லை!




அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்குபற்றவில்லை!



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற;ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண அவர் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி!

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி!

காங்கிரஸ் உயர் மட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்



நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி- பிரதமர் மன்மோகன் சிங்- வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கொண்ட காங்கிரஸ் உயர் மட்டக் குழு பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி கலந்துரையாடியது.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

ஆகவே  மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை' என காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Tuesday, October 29, 2013

பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி!


பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி!











ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 23 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
நேற்று (29)  மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைத் தலைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

பாதுகாப்புத் துறை பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

சகல துறைகளிலும் திறமை காட்டிய பாதுகாப்பு அதிகாரிக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


கண்டி தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்!


கண்டி தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) சரித்திரப் பிரசித்தி பெற்ற கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சமய வழிபாடுகளுக்காக அங்கு வந்திருந்த பொது மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க- பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்தன- லொஹான் ரத்வத்த ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

தெமட்டகொட வீடமைப்புப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்!




தெமட்டகொட வீடமைப்புப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்!



குடிசை வாசிகளுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும்  வீடமைப்புத் திட்டங்களை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலளார் கோதாபய ராஜபக்ஷ நேற்று (28) பார்வையிட்டார்.
dematagoda-1.jpg

துரிதமாக நடைபெற்றுவரும் வீடமைப்புப் பணிகள் குறித்து அவர் விசாரித்தறிந்துகொண்டதோடு கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
Dematagoda-2.jpg

தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் குடிசை வாசிகளையும் நேரில் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.
Dematagoda-3.jpg

தெமட்டகொட பிரதேசத்தில் 718 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இவை அப்பிரதேச குடிசை வாசிகளுக்கு விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


மாநாடு  பற்றிய  சரியான தகவல்களை தமிழ் ஊடகங்கள் வழங்கவேண்டும்!

-அஸ்வர் எம்.பி கோரிக்கை-
aswar-mp.jpg

இலங்கையின் பொருளாதார- மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்கு  பாரிய பங்களிப்பை ஏற்படுத்தி தரவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு பற்றி மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு செல்வது தமிழ் ஊடகங்களின் கடமை என தகவல் ஊடகத் துறை அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பின் எ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (28ம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- 1977ம் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு இதுவாகும். 30 வருடகால கொடூர யுத்தம் நடைபெற்று ஓய்ந்த பின்னர் நடக்கும் இம்மாநாடு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்றது.

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் மாநாட்டுக்கு வருவதாக இன்றுவரை உறுதியளித்துள்ளன.. இது இன்னும் அதிகரிக்கும் என்ற நாம் நம்புகிறோம். நாட்டின் பொருளாதார- கட்டுமான- முதலீட்டு அபிவிருத்திகளுக்கு இந்த மாநாடு சிறந்த பாதையமைத்துக் கொடுக்கும். உல்லாசப் பயணத்துறையின் விரைவான அபிவிருத்தியடையும்.

ஆபிரிக்க நாடுக்கள் மத்திய கிழக்கு நாடுகள் என அனைத்து நாடுகளும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வருகையால் இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நாட்டுக்கு வருமானம் பெருகும்.

கொழும்பில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என இந்திய பத்திரிகைகள் இன்னமும் செய்தி வெளியிடுகின்றன. நாட்டைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப பல சக்திகள் முயல்கின்றன. நமது நாட்டின் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை- அபிவிருத்தி என்பவற்றை சர்வதேசம் கண்டு உண்மை நிலையை அறிய இந்த மாநாடு சிறந்த சந்தர்ப்பமாகும்.

அரசியல் லாபம் கருதி தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சினையை பூதாகரமாக கிளப்புகின்றனர். ஆனால் டில்லி சரியான தீர்மானத்தை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, October 27, 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் முதலாவது பிரயாணம்!


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் முதலாவது பிரயாணம்!



இலங்கையின் இரண்டாவது அதிவேகப்பாதையான  கொழும்பு - கட்டுநாயக்க வீதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் திறந்து வைத்தார்.



நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி புதிய அதிவேக வீதியில் தமது காரைச் செலுத்தி வாகன போக்குவரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.


பேலியகொடையிருந்து சீதுவை வரை ஜனாதிபதி தமது காரில் தமது பாரியார் சகிதம் அதிவேகப்பாதையில் முதன் முதலில் பிரயாணம் செய்தார். அதற்கான கட்டணத்தையும் செலுத்தினார்.


இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



26 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி-   சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியை பயன்படுத்துவதன் மூலம் பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவிற்கு சுமார் 15 நிமிடங்களில் சென்றடைய முடியும் என பெருந்தெருக்கள் செயற்றிட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தhர்.

இன்று மாலை முதல் மக்கள் இந்த வீதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவையொன்றையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கயைம இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சொகுசு பஸ்கள் இந்த வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.(எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்