இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் நாளை 19 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவர் என கடற்படை அறிவித்துள்ளது.
இதுவரையில் 140 மீனவர்களுடன் அவர்களது 31 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுவிடுவர் எனவும் கடற்படை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
காங்கேசன்துறைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் 116 மீனவர்களும், மன்னாருக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் 24 மீனவர்களும் கடற்படையினரால், இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் நேற்றையதினம் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் முன்னிலையில், கடற்படையினரால், இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமது படகுகள் மூலம் இந்தியா சென்றடைவதற்கான எரிபொருள்களையும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகம் வழங்கியது
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment