Wednesday, March 12, 2014

சர்வமதத் தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு!

சர்வமதத் தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு!




முப்பது வருடகால கொடிய யுத்தத்திலிருந்து மீண்டு,  இன்று பாரிய அபிவிருத்திப் பாதையில் இலங்கை செல்வதை பொறுக்காத சர்வதேச மற்றும் உள்நாட்டு சதிகாரர்களே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றனர்  என அக்கமஹா பண்டித்த- பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை (11) ஜெனீவா விவகாரம் தொடர்பாக சர்வ மதத் தலைவர்கள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டுக்கெதிராக முன்னெடுக்கப்படும் இந்த சதித்திட்டத்தை  நாட்டின் அனைத்து இனத்தவரும் எவ்வித பேதமுன்றி  ஒன்றிணைந்து தோற்கடிக்கவேண்டும். பெளத்த - இந்து- இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் ஆசிர்வாதத்துடன் நாம் அதனை முறியடிக்கவேண்டும். எமது எதிர்கால சந்ததியினருக்காக எமது இலங்கையை பாதுகாப்பு மிக்க நாடாக மாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஊடவியலாளர் சந்திப்பில் தேசிய  ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்தந்தை சரத் ஹெட்டியாராச்சி- தம்மரஷ்மி மன்றத்தின் தலைவர்  கலகம தம்மரங்ஸி தேரர்- தேசிய  ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத்தலைவர் சைய்யத் ஹசன் மவ்லானா ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment