ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) மாலை பிலியந்தலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு பெருந்திரளான பொது மக்கள் கூடிநின்று ஜனாதிபதிக்கு பெரும் உற்சாகமான வரவேற்பளித்தனர். அவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.
பிரதமர் தி.மு. ஜயரத்ன, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஆகியோர் உட்பட மற்றும் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment