பதுளை மாவட்டத்தில் 4512 விவசாயிகளுக்கு ஓய்வூதியம்!
பதுளை மாவட்ட விவசாயிகள் 4512 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பதுளை தபால் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பதுளை மாவட்டத்தில் 31599 விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுள் 4512 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 800 விவசாயிகளுக்கு நேற்று முன்தினம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான எஸ்.எம். சந்திரசேன, நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா மற்றும் பதுளை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment