Tuesday, March 18, 2014

காலி மாவட்ட வர்த்தகர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

காலி மாவட்ட வர்த்தகர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!






'காலு தெக்ம 2014' என்ற தலைப்பில் காலி மாவட்ட வர்த்தர்கள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஹிக்கடுவ ஜாயா ஹோட்டலில் நடைபெற்றது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய,பெரிய. நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வர்த்தகத் துறை மற்றும் மீன்பிடித்துறைகளின் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்ததுரையாடப்பட்டன.

சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே, காலி மாவட்ட பாராளுமன்ற   உறுப்பினர் மனுஷ நானாயக்கார, மக்கள் வங்கித் தலைவர் காமினி செனரத் ஆகியோர் உட்பட மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment