Monday, September 9, 2013

கண்டி மாவட்ட முஸ்லிம்களுடன் ஜனாதிபதி நட்புறவுச் சந்திப்பு!

கண்டி மாவட்ட முஸ்லிம்களுடன் ஜனாதிபதி நட்புறவுச் சந்திப்பு!

கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான நட்புறவுச் சந்திப்பொன்று நேற்று (08) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.


ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றும்போது சகல இன மக்களுக்கும் சகல சமயங்களுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என்று கூறினார்.




இந்த அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம்களைத் தூரமாக்குவதற்கு சில சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன-  அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி- நிமல் சிறிபால டி சில்வா- மஹிந்தானந்த அளுத்கமகே- பிரதியமைச்சர் அப்துல் காதர்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)

நன்றி

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, September 8, 2013

நீர்கொழும்பில் கடல் கொந்தளிப்பு - படங்கள் இணைப்பு

நீர்கொழும்பில் கடல் கொந்தளிப்பு - படங்கள் இணைப்பு



சீரற்ற கால நிலைக் காரணமாக நீர்கொழும்பு பலகத்துறை பிரதேச கடற்பகுதியில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் எமில்டன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து ஏத்துக்கால பிரதேசத்தின் ஆற்றுப் பகுதியை அண்மித்த வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஏத்துக்கால சிரமதான மாவத்தை, சில்வெஸ்டர் வீதி, சாந்த செபஸ்த்தியன் வீதி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளே நிரில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


-நஸீப் முஹம்மட்-

Thanks Import Mirror

Friday, September 6, 2013

மாபெரும் மலர் மாலை ஜனாதிபதிக்கு அணிவிப்பு!



மாபெரும் மலர் மாலை ஜனாதிபதிக்கு அணிவிப்பு!






மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை  உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குண்டசாலை - திகன கெங்கல்ல விளையாட்டரங்கில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றது.





புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் முன்னாள் மாகாண சபை  உறுப்பினருமான முரளி ரகுநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டு ஜனாதிபதிக்கு மா பெரும் மலர் மாலை அணிவித்தார்.



பிரதமர் தி.மு. ஜயரத்ன- அமைச்சர்களான பி. தயாரத்ன- நிமல் சிறிபால டி சில்வா- கெஹெலிய ரம்புக்வெல- லக்ஸ்மன் செனவிரத்ன - எஸ்.பி. திஸாநாயக்க- ரோஹி;த்த அபேகுணவர்தன- அப்துல்காதர்- மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.




-எம்.ஜே.எம். தாஜுதீன்

Tuesday, September 3, 2013

பாக்கிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!


பாக்கிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!


பாகிஸ்தானின் திட்டமிடல்இ அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் அஹ்சன் இக்பால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  நேற்று காலை (03) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

கொடிய யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் புகழ் சர்வதேச அளவில் ஓங்கியுள்ளதென பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பரவிய டெங்கு நோயைக் கட்டுப்படுத்த  மருத்துவர் குழுவொன்றை அனுப்பிவைத்த இலங்கை அரசாங்கத்துக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் மக்கள் இதன் காரணமாக இலங்கை மீது நல்லெண்ணம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதர உறவுகளை மேம்படுத்துவது தெடர்பில் இருவரும் கலந்ததுரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, September 1, 2013

ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்!

ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்!



முன்னாள் அமைச்சர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் எண்ணத்தில் அடித்தளமிடப்பட்ட ஒலுவில் துறைமுகம் இன்று (01) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.



மீன் பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகமாக இத்துறைமுகப்பணிகள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.


டென்மார்க் அரசின் உதவியுடன் 2008 ஆம் ஆண்டு  இத்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 7000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.


இதேவேளை- மட்டக்களப்பு வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தையும் ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.

மஹிந்த சிந்தனை தூர நோக்கின் அதிவேகப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




அமைச்சர்களான பி. தயாரத்ன- ரவூப் ஹக்கீம்- பிரதி அமைச்சர்களான ரோஹித்த குணவர்தன- ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்- மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் அபேவிக்ரம- கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் - பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



-எம்.ஜே.எம். தாஜுதீன்