சமாதானத்தை உறுதிப்படுத்துவதை விடுத்து தற்போது அடைந்துள்ள சமாதானத்தை சீர்குலைக்கவே யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
பல வருட வரலாற்றைக் கொண்ட நாடொன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் இவ்வாறான அநீதியான அரசியல் திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது என மகாநாயக்க தேரர்கள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு மகஜர் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றைக் கொண்டுவருவது இறைமைக்கு எதிரான செயற்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவில் யுத்தங்களில் ஈடுபட்ட உலகின் ஏனைய நாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தாமல், இலங்கை தொடர்பில் மாத்திரம் பிரேரணையொன்றை கொண்டுவருவது ஓர் அரசியலாகவே இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment