Tuesday, March 18, 2014

மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!







மாத்தறை மாவரல ஶ்ரீமத் அனாகரிக தர்மபால மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

கல்வியமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுகூடத்தில் 25 கணனிகள் கொண்ட மொழிகள் ஆய்வுகூடம் மற்றும் 40 கணனிகள் கொண்ட தொலைக் கல்வி மத்திய நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகூடத்தை திறந்துவைத்த பின்னர் ஜனாதிபதி மாணவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

இதுதொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, லக்ஷமன் யாபா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment