அரசாங்க தகவல் திணைக்களத்தின் அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்திலிருந்து மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்காக சகல ஊடக நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடன் உடனடியாக அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் தேர்தல் பெறுபேறுகள், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் உடனடியாகவே ஊடகங்களுக்கு விநியோகிக்கப்படும்.
இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை சகல ஊடக நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களுக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சகல வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்திலுள்ள சகல இலத்திரன் ஊடகங்களும் தமது நேயர்களுக்கு உடனுக்குடன் தேர்தல் பெறுபேறுகளை வழங்குவதற்காக ஒளி-ஒளிபரப்பு கூடங்களையும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைத்துள்ளன.
இருபது வானொலி நிலையங்களும் ஒன்பது தொலைக்காட்சி நிலையங்களும் இன்று இப்பொழுது அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து தமது ஒளி-ஒலிபரப்புகளை ஆரம்பித்துள்ளன. அவ்வாறே அச்சக ஊடகங்களுக்கும் தேர்தல் பெறுபேறுகளை வழங்கவும் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.
கையடக்க தொலைபேசி குறுந்தகவல் சேவையும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்த இணையத்தளமான http://www.news.lk/ , http://www.sinhala.news.lk, http://tamil.news.lk/ஆகிய இணையத்தளங்கள் மூலமும் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் உலக நாடுகளுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்