ஜனாதிபதி அபூதாபி சென்றடைந்தார்!
இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அபூதாபி சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
அபுதாபி மாநகர சபைத் திணைக்களத்தில் தலைவர் மஜீத் அலி அல் மன்சூரி மற்றும்
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment