Wednesday, January 22, 2014

இலங்கை - மாலைத்தீவு இருதரப்பு பேச்சுவார்த்தை!

இலங்கை - மாலைத்தீவு இருதரப்பு பேச்சுவார்த்தை!







ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த  மாலைத்தீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் பாத்திமா இப்றாஹீம் ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.  செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்கள் கொடியசைத்து வரவேற்றனர்.

இருதரப்பு பேச்சுக்கள் ஆரம்பிக்க முன்னர் சிரேஷ்ட அமைச்சர்கள் மாலைதீவு ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

சுகாதாரம், சுற்றுலா, விமான சேவைகள் , குடியேற்றம், தொழிற்பயிற்சி, விளையாட்டு மற்றும் குற்றவாளிகள் பரிமாற்றம் ஆகிய துறைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இவருக்காக ஜனாதிபதி செயலகத்தில் கௌரவ அணிவகுப்பு மரியாதையொன்றும் வழங்கப்படவுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகள் முக்கியத்துவம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment