யாழ்ப்பாணத்தில் பொங்கல் முத்திரை வெளியிட்டார் பிரதமர்!
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இரண்டு முத்திரைகளையும் முதல் நாள் கடித உறை ஒன்றையும் பிரதமர் தி. மு. ஜயரட்ன நேற்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
வட மாகாண அஞ்சல் திணைக்களமும், பிரதமர் அலுவலகம் இணைந்து இந்த நிகழ்வை யாழ்ப்பாணம், நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில்ஏற்பாடு செய்திருந்தது.
தைப்பொங்கல் தினத்தையும், உழவர் தினத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்ட 5 ரூபா மற்றும் 25 ரூபா பெறுமதியான முத்திரைகளையும் முதல் நாள் தபால் உறையையும் பிரதமர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
இந்நிகழவில் வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி , பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment