சந்திரிக்கா தலைமையில் சமயங்களுக்கு இடையிலான நல்லுறவுக் கூட்டம்!
சமயங்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்துக்கு சமுகமளிக்குமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோன்று, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, இக்கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய வரைபைத் தயாரிக்க, முக்கியஸ்தர்களின் குழுவொன்றை தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் நியமித்துள்ளது.
இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment