மாலைதீவின் ஜனாதிபதி நாளை இலங்கை வருகிறார்!
மாலைதீவின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார்.
அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இரு நாடுகளினதும் நல்லுறவுகளை மேலும் மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்.
அத்துடன் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் மாலைதீவு ஜனாதிபதி பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment