முதலாம் ஆண்டுக்கு மணவர்களைச் சேர்க்கும் தேசிய வைபவம் 16 ஆம் திகதி!
அரசாங்க பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டு மணவர்களைச் சேர்க்கும் தேசிய வைபவம் இம்மாதம் 16 ஆம் திகதி கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் ஹோமாகம நியந்தகல வித்தியாகீர்த்தி கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெறும்.
இந்த வைபவத்தின் விசேட அதிதியாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துகொள்வார்.
மேல் மகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.
-எம். ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment