![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbC03PAtO-YaO9zdrJgaYJoEdA65omznbO0LCBhUuW_71ctKqIVf62q5GJrc99X2V7ryVY2y9XMyCubTiaim7LrEvJAcUX4fnrWdAgOfeTsv_p8fXbtG2jxmzrOWndttZKOxa2wxWtLtAk/s1600/colourful-2.jpg)
இராணுவ வீரர்களுக்கான 'வர்ண இரவு-2013' கொண்டாட்ட நிகழ்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று இடம் பெற்றது.
‘விளையாட்டினுடாக நல்லிணக்கம்’ எனும் கருப்பொருளில் இராணுவ விளையாட்டுத் துறையில் பிரகாசிப் போருக்காக
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வைபவத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பாரம்பரிய விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்த யுத்த வீரர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து இராணுவ கீதம் இசைக்கப்பட்டு பணிப்பாளர் நாயகம் (விளையாட்டு) மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்னாயக்கவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவாவனிதாப் பிரிரவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, சேவாவனிதா இராணுவப்பிரிவின் தலைவி திருமதி.தமயந்திரத்னாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் துனைவியர்கள் மற்றும் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment