இன்று காலை 11.30 மணிக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை!
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தலைமையில் 8 பேர் கொண்ட குழுவொன்று நேற்று மாலை இந்தியாவுக்கு பயணமானது
மீன் பிடித்திணைக்களப் பணிப்பாளர் நிமல் ஹெட்டியாரச்சி அமைச்சரின் இணைப்பு செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் இருவர், வட பகுதி மீன் பிடி அமைப்பின் தலைவர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நீல் ரொசேரோ ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 32 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தது. தமிழக சிறைகளில் உள்ள 52 இலங்கை மீனவர்களை தமிழ்நாட்டு அரசு விடுத்தது.
இன்றைய முதற் கட்ட இரு தரப்பு பேச்சுவாரத்தை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திசுடன் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
-எம்ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment