வவுனியாவில் பிரமாண்டமான விளையாட்டு விழா!
வவுனியாவில் இதுவரை காலமும் தொலைக் காட்சிகளில் மட்டுமே பார்க்கக்கூடியதாக இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டம், கார் ஓட்டம் போன்ற நிகழ்வுகளை வடபகுதி மக்கள் முதன் முறையாக நேரடியாக பார்க்கின்ற சந்தர்ப்பத்தை இலங்கை விமானப் படையினர் வவுனியாவில் ஏற்படுத்தி கொடுத்தனர்.
இலங்கை விமானப்படையும், இலங்கை மோட்டார் கழகமும் இணைந்து நடத்திய இவ் விளையாட்டு விழா வவுனியா விமானப்படை தலைமையக மைதானத்தில் ஆரம்பமாகியது.
விளையாட்டுக்களில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து போட்டி யாளர்கள் விருப்புடன் பங்கேற்றிருந்தனர். அத்துடன் இந்நிகழ்வுகளைக் காண்பதற்கும் அதிகளவிலான மக்கள் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விளையாட்டுக்களோடு முச்சக்கர வண்டி ஓட்டம், சைக்கிள் ஓட்டம், என்பனவும் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன. இவற்றோடு பெண்களும் மோட்டார் சைக்கிள் ஓட்டத்தில் பங்கு பற்றினர்.
மோட்டார் பந்தய ஓட்டத்தில் ஒன்பது வயதுகளே நிரம்பிய ஒரு சிறுவனும் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை பார்வையாளர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment