Thursday, January 9, 2014

ஆயர்களுடன் ஸ்டீபன் ஜே. ரெப் சந்திப்பு!

ஆயர்களுடன் ஸ்டீபன் ஜே. ரெப் சந்திப்பு!




இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் நேற்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.

இவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் தோமஸ்சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரைச் சந்தித்து யுத்த்திற்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தின் போது மேற்கொள்ளப்படப்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இவ்வருடம் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கையில் யுத்திற்குப் பிந்திய நிலவரங்களை ஆய்வு செய்யும் நோக்கில் இவர் விஜயம் செய்துள்ளதாக யாழ் மாறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயமகம் தெரிவித்தார்.

அத்தோடு யுத்தகாலத்தில் அரசாங்கத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத  ஆயுதப்பாவனை, போர் தவிர்ப்பு வலயங்கள் மீதான தாக்குதல் மற்றும் ஆலயங்கள் மீதான  தாக்குதல்கள் மூலம் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தொடர்ந்து காணமல் போனவர்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கம் அளிததாக அவர் மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment