கல்முனை அமானா வங்கியில் தீ விபத்து!
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமானா வங்கியில் நேற்று இரவு (18) 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வங்கிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் முன்புறமாக உள்ள ஏ.ரீ.எம் இயந்திரத்திற்குப் பொருத்தப்பட்டுள்ள
வாயு சீராக்கி (ஏ.சி) யில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளனர்.
.
இராணுவத்தினரும் கல்முனை பொலிசாரும் கல்முனை மாநகர சபை தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வங்கியின் முன் கண்ணாடிகள் உடைந்திருப்பதால்
வங்கிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment