பகல் நேரங்களிலும் 'ஹெட்லைட்'டை ஒளிரச்செய்யதப்படியே மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுமாறு மோட்டார் சைக்கிள் சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு ஹெட்லைட்களை ஒளிரச்செய்வதனால் விபத்துக்களை தவிர்க்க முடியுமென்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டதையடுத்தே இன்று முதல் (23) இப்பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை வெற்றியளித்தால்,அதனை சட்டமாக்கி நாடு முழுவதும் முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment